முடிவில்லா வாழ்க்கை பாதை

முடிவில்லா வாழ்க்கை பாதை

நடக்க நடக்க
நகர்ந்துதான்
செல்கிறது இந்த
பாதை..!

அறிமுகமானோரும்
இல்லாதோரும்
என்னுடனே நடந்தாலும்
ஒருவர் கூட
பயணத்தை முடித்து
விட்டதாய்
தெரியவில்லை

படைத்தவன்,
மகான், அறிஞன்
என்கிறார்கள்

ஒருவர் கூட
பயணத்தை முடித்து
விட்டதாய்
தெரிவிக்க மறுக்கிறார்கள்,

இல்லை என்றால்
பயணத்திலேயே
கரைந்து காணாமல்
போய் விடுகிறார்கள்

பாதையின் முடிவை
எதிர்பார்த்து நானும்
நடந்து கொண்டுதான்
இருக்கிறேன்

என்னுடனே பாதையும்
நகர்ந்து
கொண்டேதான்
இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (18-Jan-22, 10:34 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 215

மேலே