ஆண்
தாயின் கருவறையில் - மகனாக
உன் எச்சில் பால் குடித்தவர்களுக்கு - சகோதரனாக,
கைப்பை எடுத்து பள்ளிக்குச் சென்றாய் - மாணவனாக,
தோள் மீது கைபோட்டு சுற்றினாய் - நண்பனாக,
வாழ்வாதாரத்தை தேடி ஓடினாய் - சேவகனாக,
கண்களால் கவிதை பாடினாய் - காதலனாக,
மங்கை ஒருவளின் கை பிடித்தாய் - கணவனாக,
அன்பு மகனுக்கும் மகளுக்கும் - தந்தையானாய் - இப்பிரபஞ்சத்தில்
நீ சென்ற தூரம் - அதிகமா! இல்லை, இல்லை,
நீ செல்ல வேண்டிய தூரம் அதிகம், - ஆம்
கடமைகள் காத்திருக்கின்றன,
கண்ணியத்தோடு தொடர்வாயாக, - உன் சாம்ராஜியத்தை....