வாழ்வின் உணர்வுகள்

வாழ்வின் உணர்வுகள்

காலத்தின் உணர்வுகள் கற்ற பாடம்
இளமையின் இனிமைகள் உணர்ந்தேன்!
கூட்டமாக வாழ்ந்த வாழ்வினை பெற்று
தாய்தந்தையின் பாசம் சிறப்பை கண்டேன் !
பிறப்பின் உறவின் பாசம் நிறைய கண்டேன்
ஏழ்மையின் ஏக்கத்தின் உயரவை கண்டேன்
கல்விகற்று உழைப்பின் பெருமை தந்தது
உள்ளம் மகிழ! தமிழின் சிறப்பை கண்டேன்
வளமாயின் உறவு உலகை நற்காலம் பிறந்தது !
அறியாத ஊரில் அறிஞரானேன் சிறக்கக்கண்டேன் !
பெற்றவர் சிறப்பினை ஊக்கம் தந்தது !
பெற்ற கடமை பணிந்து தொழுதேன் !
மண வாழ்வை அருளைத் தந்தது
வாழ்வின் துவக்கம் ஒளிமை தந்தது
ஏற்ற தாழ்வினை உணர்வைக் கொண்டேன்
பாசத்தைப் பொழியப் பணிந்தேன் உறவை
பாகுபாடு இல்லாமல் உள்ளம் தழுவினேன்
எண்ணற்ற எண்ணங்கள் அள்ளி தந்தேன்
மக்களைப் பெற்றுப் பெற்றவரின் நிகரானேன்
உறவின் உணர்வின் வாழ்வைக் கண்டேன்
கற்ற கல்வி பயனைக் கண்டேன்
வையகம் புகழப் பெயரைத் தந்தது
தந்தையின் வழியில் நடக்கத் துணிந்தேன்
போதித்த ஞனம் மலர கண்டேன்
ஏட்டிலே எழுதி ஏற்றம் கண்டேன்
புரியாத இடத்தில் புதிரைக் கண்டேன்
புலரும் மாந்தருக்கு இலக்கணம் தந்தேன்
வளரும் பிள்ளைகள் எண்ணம் தந்தேன்
இல்கிழத்தி இறுதிவரை துணையைத் தந்து
மதியும் குன்றி உறவும் குன்றி முழுமை அறிந்து
தனித்துவாழ தெளிவுகண்டு உறுதிப்பொழிந்து
மயம் நிலை உறவின் எல்லை கனிந்த மனது
கல்லாயிருந்து கரைந்தமனது, செறிந்தன உறவு
பறந்தன பக்கத்தில் இருந்தோர் இன்று

எழுதியவர் : இராகுஅரங்கஇரவிச்சந்திரன (21-Jan-22, 3:00 pm)
பார்வை : 162

மேலே