அவள் பெண் தான்..

அன்பும் அவள் தான்
அடவடியும் அவள் தான்
இன்பமும் அவள் தான்
இம்சைகளும் அவள் தான்..

கொள்ளை அழகும் அவள் தான்
கொடுரமும் அவள் தான்
பிள்ளை முகமும் அவள் தான்
பிசாசும் அவள் தான்..

நெஞ்சை பிடிக்க தெரிந்த
வஞ்சியும் அவள் தான்
என்னை முழுவதும் கொன்று
போகும் நஞ்சியும் அவள் தான்..

கொஞ்சும் தமிழை கொண்டாடியதும் அவள் தான்
கோபகாரியாக என்னை தின்று
மீதி விட்டதும் அவள் தான்..

பாவையும் அவள் தான்
என் பார்வையும் அவள் தான்
பசியும் அவள் தான்
என் ருசியும் அவள் தான்..

அவள் பெண் தான்
ஆனால் என்னை முழுவதும்
கொண்டாடி விட்டும்
கொன்று விட்டும்
செல்பவள் அவள் தான்..

எழுதியவர் : (21-Jan-22, 8:50 pm)
Tanglish : aval pen thaan
பார்வை : 47

மேலே