ஆங்கின்னா கள்ள மனத்தார் தொடர்பு - இன்னா நாற்பது 33

இன்னிசை வெண்பா

கள்ளுண்பான் கூறுங் கருமப் பொருளின்னா
முள்ளுடைக் காட்டி னடத்த னனியின்னா1
வெள்ளம் படுமாக் கொலையின்னா வாங்கின்னா
கள்ள மனத்தார் தொடர்பு. 33

- இன்னா நாற்பது

பொருளுரை:

கட்குடிப்பவன் சொல்லுகின்ற காரியத்தின் பயன் துன்பமாகும்;

முட்களையுடைய காட்டில் நடத்தலானது மிகவும் துன்பமாகும்;

வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாகும்,

அவ்வாறே, வஞ்சமனத்தினை யுடையாரது நட்பு துன்பமாகும்.

மாக்கொலை - விலங்கைக் கொல்லுதல் எனினும், நீர்ப் பெருக்கில் அகப்பட்டு வருந்தும் விலங்கைக் கரையேற வொட்டாது தடுத்துக் கொல்லுதல் இன்னாவாம் என்பது கருத்து.

(பாடம்) 1. நடக்கி னனியின்னா.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jan-22, 7:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 8

சிறந்த கட்டுரைகள்

மேலே