குட்டிக் கவிதைகள்

வளைந்து நெளிந்து மலையேற
நன்றாகத் தெரிகிறது
அயர்ச்சி!
*****
சூரியன் வெள்ளையடிக்க
அதனைக் கொள்ளையடிக்கும்
இரவு!
*****
மேடையில் இருக்கும் வேளை
பெரும் ஆட்டம் ஆடுகிறது
நாக்கு!
*****
முடிவே இல்லாமல்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
காலம்!
==
வெட்டிய மரத்தால்
சிதைக்கப்படுகிறது
பறவைக்குடும்பம்!
==
காய்ந்த புல்
காற்றோடு சாரல்
மீட்சி!
*****
இருள் அதிகமாக
நன்றாகத் தெரிகிறது
மின்மினி!
*****
ஒளி வந்ததும்
வலி வருகிறது
கண்ணில் நீர்!
*****
எறும்பின் பாதையில்
ஊர்ந்து கொண்டிருக்கின்றன
கண்கள்!
*****
சேறும் சகதியும்
சொல்லிச் செல்கிறது
உழவன் பாதை
==
அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (21-Jan-22, 9:36 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 256

மேலே