நெடுமாட நீள்நகர்க் கைத்தின்மை யின்னா - இன்னா நாற்பது 36
இன்னிசை வெண்பா
பொருளிலான் வேளாண்மை காமுறுத லின்னா;
வருமனை பார்த்திருந் தூணின்னா; இன்னா
நெடுமாட நீணகர்க் கைத்தின்மை; இன்னா
கெடுமிடங் கைவிடுவார் நட்பு. 36
- இன்னா நாற்பது
பொருளுரை:
செல்வ மில்லாதவன் பிறர்க்கு உதவி புரிதலை விரும்புதல் துன்பமாகும்;
விருந்துக்குச் சென்ற மனையிலுள்ளோர் முகம் எதிர்நோக்கியிருந்து அழைத்தால் மட்டுமே உண்ணுதல் துன்பமாகும்;
நெடிய மாடங்களையுடைய பெரிய நகரத்திலே பொருளின்றி இருத்தல் துன்பமாகும்;
வறுமையுற்ற நேரத்தில் நல்ல நண்பர்கள் நம்மைவிட்டு நீங்குவது துன்பமாகும்.
சிறந்த கட்டுரைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
