கேள்விகள் கேளு

கேள்விகள் கேளு.
உழைப்பவன்
உருளுகிறான்
மண்ணில்,
உழையாதவன்
பிரளுகிறான்
பஞ்சணையில்.
வெயிலில்
காய்கிறான் உழவன்,
வாங்கிய கடனில்
மடிகிறான் முடிவில்.
கேட்டால்!
அது அவரவர்
விதி என்பார்
வாய் கூசாமல்.
ஆனால்........!
அவர்களுக்கு ஒன்று
நடந்து விட்டால்?
விதியை மதியால்
வெல்லலாம் என்பார்,
அரசாங்கம் சரி
இல்லை என்பார்,
சோஷலிசம்
வேண்டும் என்பார்.
விதியை தூக்கி நீ
குப்பையில் போடு,
சொல்பவரையும்
தூக்கி நீ
குப்பையில் போடு,
வீதியில் இறங்கி நீ
கேள்விகள் கேளு.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.