கருகிய சிறகுகள்

இமைகள் மூடி நான் கிடைக்க
சொப்பனத்தில் எதோ சுகமாய் சிரிக்க
ஒரு அழகிய பெண் சிறகுகளோடு விண்ணில் பறக்க
யாரோ அவள்? என என் மனமோ கேட்க
எங்கேயோ பார்த்த ஒரு பிம்பம் அவள் என மனம் நினைக்க
அது நானே!
சித்திரை பூவானம் சிவக்கயிலே
செந்தாமரை மொட்டு விரிகையிலே
சில்லென்ற தென்றல் தீண்டயிலே
சிறகு விரித்து பறக்கையிலே
சிந்தை இழந்தேனே!
புன்னகையோடு வெள்ளை வானில் வட்டமிடுகிறேன்
புண்பட்ட மனதில் குதூகலமாய் பார்க்கிறேன்
நிமிர்ந்து பார்க்கையில் அகண்ட வானத்தை அள்ளி நான் அணைக்கிறேன்
கால்கள் மிதக்க விண்ணில் நான் உலா வருகிறேன்
துள்ளி குதித்தேனே!
எல்லாம் இங்கு கனவுகளாய் வரையப்பட
ஒருகணம் நான் துயில் கலைய
விண்ணில் இருந்து மண்ணை எட்டிட
காற்றில் யாவும் கரைந்திட
வலிகள் உணர்ந்தேனே!
மனம் உடைந்திட, வானம் எட்டா கனியாக,
தரையில் தனிமரமாக, உடைந்த உள்ளதோடு
உமிழும் விழிகளோடு, நான் தொலைத்த என்னை
பார்க்கையில், அவளோ என்னை பார்க்கிறாள்
கருகிய சிறகுகளோடு!