காதல் மனம்

காதல் மனம்

நேரிசை ஆசிரியப்பா

வழுக்கிடும் குழந்தையை கபடர் பாராட்
டல்யேன் இனமொழி மதமழிக் கத்தான்
வளர்ந்த மூடரே யின்னும் விளங்கார்
இனம்மொழி மதமெலாம் உண்மை யாமிது  .   
தமிழர் இனம்தமி ழரறிய வில்லை
தமிழரின் னும்தமி ழரறிய வில்லை
தான்சைவம் எனவெட் கப்படு கிறான்பார்
பத்துவ யதிலே மதம்துறந் தனளென
பனிரெண் டில்மொழி துறந்தா ளாம்கேள்
பதினைந் தில்மா னம்துறந் தோடிய
வெறியள் வெகுளிப் பெண்ண
வளையினம் துறந்தா ளெனப்பொய் தானே

பதிமூன் றில்துறந் ததுமொழி தனையுமாம்
பதினைந் தில்துறந் ததுமதத் தையுமே
உடல்வெறி யதினுந் துதலில் துறந்தாள்
எதையும் அறியா துறந்த குரங்கு
காதலென் றுபிதற் றிவீட்டை குலுக்கிய
காமப் பேய்க்கா தலனுடன்
ஆடிவீட் டைத்துறந் தோடிடும். வெளியே



குறள் வெண்பா

கும்பலொன்று தேடிக் குடிகெடுக்க காத்திருக்கும்
வம்பரை யோட்டி யடி

.....

எழுதியவர் : பழனி ராஜன் (25-Jan-22, 6:55 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 111

மேலே