மெழுகின் வெளிச்சமாய் என்னுள் வந்தவளே 555

***மெழுகின் வெளிச்சமாய் என்னுள் வந்தவளே ***


ப்ரியமானவளே...

நீ கோபமாக
பேசும் நேரம் வலித்தது...

கோபம் என்று
நினைக்கையில்...

முத்தமிட்டு சொன்னது
உன் சமாதானம்...

உனக்கு காதல் கடிதம்
எழுத நினைத்தால்...

வார்த்தைகள் முளைத்து
கொண்டே இருக்கிறது...

பதியம் போட்ட
விதைகளை போல...

எதை கோர்ப்பது எதை தவிர்ப்பது
தெரியவில்லை எனக்கு...

உன் ஆடையில் கோர்த்து
கொள்ளும் சிறு ஊக்கு வைத்து...நீ

யும் நானும் அழகான
ஜோடி என்கிறாய்...

பௌர்ணமி இல்லாத
என் வானத்தில்...மெ

ழுகின் வெளிச்சம் போல்
நீ வந்தாய் என்னுள்...

உன் கரம் விட்டு
இறங்கிய வளையல்கூட...

என் காதலை சொல்லுதடி
இதய வடிவில்...

எடைக்கேற்ற நீரை வெளியேற்றும்
நீர் குமிழ் அல்ல நான்...

ஒரு நெல் போட்டால் ஆயிரம்
நெல் கொடுக்கும்...

நெற்பயிர் போல்
என் இதயமடி...

நான் நீருக்குள்
இருக்கும் மீன்தான்...

அதனால்தான் என் சிரிப்பும்
அழுகையும் உனக்கு தெரியாமலே...

பாத்திரத்தில் நிறைந்து
வழியும் நீரை போல...

உன் மீதான
என் காதல்...

காலம் கடத்திவிடாதே
என் கரம் கோர்க்க வந்துவிடடி.....


முதல்பூ .பெ .மணி .....

எழுதியவர் : முதல்பூ .பெ .மணி (28-Jan-22, 5:45 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 204

மேலே