காதலித்துப்பார்

*காதலித்துப்_பார்*

பேசாத மௌனமொழிக் கவிப்பாடும்
நினைவுகளில் நெஞ்சம் களிப்பாடும்
தென்னங்கீற்றில் சுவாசம் சூடேறும்
சிந்தும் புன்னகையில் தேனூறும்
வட்டில் உணவின்றி வயிறு நிறையும்
கண்ணீரில் மனக்காயங்கள் குறையும்

தியானம் செய்யாமல் தத்துவம் பிறக்கும்
கிறுக்கல்கள் எல்லாம் கவிதையாய் உருவெடுக்கும்
கடுங்கோடையில் பூ மேனிக் குளிரும்
யாருமின்றி அழகியப் பூவிதழ் உளறும்
கட்டாந்தரையில் இனியக் கனவுகள் மிதக்கும்
பிடிக்காதது எல்லாம் இப்போது பிடிக்கும்

காதலித்துப் பார்

உளியின்றி சீரியச் சிற்பம் வடிப்பாய்
உள்ளம் உருகி  மெழுகாய்  ஒளிர்வாய்
கடிதத்தை எழுதி கசக்கி எறிவாய்
எறிந்ததை மீண்டும் படித்து  ரசிப்பாய்
சிறியமுள் வேகமாய்ச் சுற்றிடுவதாக நினைப்பாய்
பாகற்காயைத் தேனமுதாய்ச் சுவைப்பாய்

விண்ணின்றி முகிலில் வெண்ணிலவுத்
தெரியும்
இரவில் நட்சத்திரங்கள் சீக்கிரம் மறையும்
கைக்கோர்த்து  நடக்கையில் சாலைகள்
விரியும்
விழி அசைவில் வலிகள் புரியும்
காத்திருக்கும் சுகத்தினை இதயம்  அறியும்
தொலைதூரம் வந்தாலும் நெருக்கம் இணையும்

காதலித்துப் பார்

அலைபேசி  உன் ஆருயிர் அம்மாவாகும்
குறுஞ்செய்தி உற்ற உயிர்த் தோழனாகும்
பகலவன் புலராமல் பொழுது அதிகமாகும்
கழுதையின் குரல் இனியக் கானமாகும்
உடல் மொழி தெளிவாய்ப் புலனாகும்
உள்ளுணர்வுகள் மனக்கடலில் சங்கமமாகும்

தனிமையின் சுகத்தைச் சிலாய்த்து
வர்ணிப்பாய்
உன்னை நீயே உளமாற
விமர்சிப்பாய்
எறிந்தக் குப்பையைச் சேகரித்து
வைப்பாய்
சேகரித்ததை நள்ளிரவில் எழுந்து பார்ப்பாய்
குடையை விரித்து மழையைப்
பிடிப்பாய்
ஓவியம் வரைந்து தலையணையில்
மறைப்பாய்

காதலித்துப் பார்

#சரவிபி ரோசிசந்திரா

எழுதியவர் : சரவிபி ரோசிசந்திரா (28-Jan-22, 3:33 pm)
Tanglish : kathalithuppar
பார்வை : 137

மேலே