ஞானம்

வாசித்திருக்கக்கூடாது
வாழ்க்கைப் புத்தகத்தின்
வறுமை அத்தியாயத்தை –
வந்தவர்களிடத்தில்!

பரிச்சயமானவர்களென
பகிர்ந்துகொண்டதில்
வெளிப்பட்டதென்னவோ
அரிதார முகங்களின்
அக விகாரங்கள்!

வேடம்கலைத்த
ஊனத்தின் ஊற்றுக்கண்கள்
ஆறுதல் போர்வையில்
ஆடைக் களைந்ததில்
கூடியிருக்கிறது சோகம்.

கடனுக்கு அத்திவாரமென
கயிறுதிரித்த காதுகளுடன்
அவர்கள் காணாமல் போக…

முகவரி தொலைத்த – என்
ஊனக்கண் ஊர் திரும்பியது
வெளிச்சம் போர்த்தி!
.
சொத்துக்களை மட்டுமல்ல;
சோகங்களையும் பூட்டிவையுங்கள்.
தோள்கொடுப்பவர்களை விட
துகிலுரிப்பவர்களே
அநேகர் இச்சமூகத்தில்!

எழுதியவர் : ஜ. கோபிநாத் (29-Jan-22, 1:04 pm)
சேர்த்தது : Gopinath J
பார்வை : 75

மேலே