அன்பு மகளுக்கு

அன்பு மகளுக்கு

மூர்த்தி கடின உழைப்பாளி. உழைப்பால் உயர்ந்தவன். இரண்டு பிள்ளைகள். மகன் , மகளுக்கு தன் கடமை அனைத்தையும் முடித்து நிம்மதியடைத்தவன் தனது இறுதி நேரத்தில் இருந்தான். தன் மணைவி மற்றும் பிள்ளைகளுக்கு தான் இல்லாத பொழுதும் அவர்களை காப்பாற்ற அணைத்து சொத்துக்களும் சேர்த்துவைத்திருந்தான். கண்களை முழுவதுமாய் திறக்க முடியவில்லை. அவசர சிகிச்சை பிரிவின் எந்திரத்தின் சத்தம் காதுகளை தொந்தரவு செய்தாலும் அவன் கடைசி நினைவுகள் அதே அவசர சிகிச்சை பிரிவு முன்பு அவன் நின்ன தருணத்தை நோக்கி பயணித்தது. இந்த முறை மகளின் பிறப்பிற்காக காத்து கொண்டிருந்தான். ஏற்கனவே மகன் பிறந்து மூன்று வருடங்கள் ஆகின்றது. மகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தான். டாக்டர் அவரை உள்ளே அழைத்து குழந்தையை கொடுத்த நொடி தேவதை கையில் இருப்பதை உணர்ந்தான். ஆதிரா என்று பெயர் சூட்டினான். தன் மகள் மேல் அப்படியொரு பாசம். மகள் சொல்லுக்கு மறு சொல்லில்லை. மனைவி மகன் இரண்டு பேரும் தன் காரியத்தை ஆதிரா மூலமாக சாதித்து கொள்வார்கள். இரவு எத்தணை மணிக்கு வந்தாலும் மகளை வருடி கொடுக்காமல் உறங்க சென்றதில்லை. பள்ளி கல்லூரி படிப்பு அனைத்துக்கும் தன் மகளை பிரிந்த பாடில்லை. கோவை சுற்று பகுதியிலே நல்ல வரனை பார்த்து திருமணம் செய்து வைத்தான். தன் பேர பிள்ளைகளையும் பார்த்து ரசித்து வாழ்க்கை முழுவதும் வாழ்ந்துவிட்டான். கடைசி நிமிடங்கள் அவள் ஒருத்தி வருகைக்காக உயிர் பிரியாமல் இருந்தது. அவள் சத்தம் கேட்டதும் இதோ என் மகள் என்னை பெற்றவள் வந்துவிட்டால் என்ற மகிழ்ச்சி பொங்கியது. தன் மகளை அருகில் அழைத்து அவளின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்த்து கொண்டான், தன் இறுதி உறக்கத்திற்கு முன். அனால் இந்த முறை ஒரு சிறு மாற்றம் அவன் அவள் தலையை வருடதிற்குப்பதில் அவளை தன் தலையை வருட சொன்னான். அவளின் தாய் அன்பை பெற்று தன் அன்பு மகளின் கைகளை பற்றிக்கொண்டு விடை பெற்றான்.
வணக்கத்துடன்,
உங்கள் சரா.

எழுதியவர் : சரா (29-Jan-22, 11:27 pm)
சேர்த்தது : Sara
Tanglish : anbu magalukku
பார்வை : 200

மேலே