என்னவள் பேச்சு
என்னவள் என்னோடு பேசும்போது
என்னையே நான் மறக்கின்றேன்
காரணம் அது வெறும் பேச்சல்ல
அது தென்றலாய் வந்து மெல்லிசையாய்
வடிவெடுத்து என் இதயத்தை நெருடும்
காதல் மிகவே தரும் இன்பம்