பொங்கி எழு தமிழேபொங்கி எழு

ஆதிசிவன் தாள் பணிந்து
ஆரம்பிக்கின்றேன் நான் - அந்த
பாதிசிவன் உமையோடு வந்தெனை
பார்புகழ வைக்கட்டும் கனிந்து.
ஓதுவார் ஈங்குனை தமிழில்
ஓதியே உய்யட்டும் உலகெலாம்
ஏகுவார் ஏத்தட்டும் இதயம்
குளிர்ந்து ஓம் நமச்சிவாயமே..!
மூத்த குடிப்பிறப்பு - நம் தமிழ்
மூலமறியா தனிச்சிறப்பு
ஆத்தமுடியாமல் பிதற்றும்
அஞ்ஞான மறவர்க்கும்
ஆக்கம் கொடுக்கும் அருமருந்தாம்
ஆண்டவன் அவன்வாய்
அருளிய அமுதாய்...தேனாய்...
தித்திக்கும் தெளிமறையாம்
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகனோடு
திருஞான சம்பந்தன் வளர்த்த
அற்புத பதிகங்கள் நிறைந்த
ஆனந்த தமிழிருக்க
இடையில் வந்துதித்த பார்ப்பனர்கள்
இயக்கிய நால் வேதமாம் (சமஸ்கிருதம்)
தப்பேதுமில்லை தப்பினால் அர்த்தம்
தப்பியே அநர்த்தமாகிடும் நிலை
சங்கம் வளர்த்த தமிழ்நாட்டில்
சங்கரனுக்கில்லையாம் தமிழில் அர்ச்சனை
எங்கும் இல்லா அதிசயம் - அந்த
ஆண்டவனுக்கே அது வெளிச்சம்.
தங்க வந்த ஆரியர்கள் மெதுவாய்
தக்கவைத்த கொடுமையிது.
பொறுத்தது போதும் இனி
பொங்கி எழு தமிழே ...பொங்கி எழு..!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (2-Feb-22, 8:07 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 42

மேலே