விடுதலை இல்லா விபரீத விடியல்

தொடுவானம் அருகில் இல்லை;
தொல்லை இன்னும் விடவில்லை;
நெடுவானம் விழுவதில்லை;
நீல் வெளிப்பயணத்திற்கு முடிவில்லை;
தினம் தினம் உதிக்கும் சூரியன் ஓய்வு எடுப்பதில்லை;
நிலவும் தன் உருவத்தை மாற்றுவதை நிறுத்துவதில்லை;
அண்டங்களின் துவக்கம் தெரியவில்லை ;
ஆண்டவனும் கண்ணுக்கு புலப்படுவதில்லை; அருவியின் துவக்கம் அறியமுடிவதில்லை;
குருவியின் சப்தம் தொடரப்போவதில்லை;
கூக்குரல் ஓய்வதில்லை;
சூயனுக்கு யார் நெருப்பு மூட்டினார்கள் தெரியவில்லை;
சுழலும் பூமி எப்போது நிற்கும் யாருக்கும் தெரியவில்லை;
ஏழ்மையின் நிலை மாறப்போவதில்லை;
அறிவியல் யுகத்தில் அறிவியல் சார் யுத்தம் நிற்கப்போவதில்லை;
விளையாட்டுப் பிள்ளைகளின் சுட்டித்தனம் இருக்கப்போவதில்லை;
இயந்திர செவிலியர்களின் வளர்ப்ப்புக்கு ஆளாகாமல் இருக்கப்போவதில்லை;
வேற்று உலக மனிதனின் படை எடுப்பு நடக்காமல் இருக்கப்போவதில்லை;
விடியல் அந்திப்பொழுதுக்கு பிந்தி போகலாம்;
வியர்வை இன்றி மனிதன் உழைக்கலாம்:
நித்திறையின் நேரம் குறையாமல் இருக்கப்போவதில்லை;
நித்திறைக்கு மருந்தை தேடாமல் மனிதன் இருக்கப்போவதில்லை;
ஆடையே இல்லாமல் ஆதி மனிதனாகலாம்;
எங்கும் வாழலாம்;
எல்லை இல்லா உலகமாகலாம்;
விடியல் அந்திப்பொழுதுக்கு பிந்தி போகலாம்;
செயற்கை மரங்கள் நடலாம்;
புதிய மொழிகள் பிறக்கலாம்;
புரியாத வாழ்க்கை தொடரலாம்;
புற்களே இல்லாமல் போகலாம்;
சொற்கள் மறைந்து போகலாம்;
போராட்டமே வாழ்க்கையாகலாம்;
இயந்திர மனிதனுக்கு அடிமையாகலாம்;
சிப் நம்பரே உன் பெயராகலாம்;
பணம் இல்லாத உலகமாகலாம்;
பதவி இல்லாத மனிதனாகலாம்;
மரபுமாற்று நிகழ்வுகள் நிற்கப்போவதில்லை;
மனிதன் மிருகமாகலாம்
மிருகங்களின் பாகம் மனிதனுக்கு பொருத்தலாம்;
புதிய உலகில் பறவையாய் மனிதன் பறக்காமல் இருக்கப்போவதில்லை;

வேறருக்கத்துவங்கிய மனிதனுக்கு,
வேர்வைக்குப்பதில் விஷக் கிருமிகள் வெளிவராது இருக்கப்போவது இல்லை;
வேரோடு மனித வர்கமே அழியும் காலமும் வரலாம்;
ரோபோக்களுடன் வாழப்போகும் காலம் வராமல் இருக்கப்போவதில்லை:
மனித செயற்கைப்பாகங்களைச் செய்யும் தொழிலும்,
தெருவுக்குத் தெரு மருத்துவமனை பிறக்காமல் இருக்கப்போவதில்லை;
வாகங்ககள் சாலைகளில் செல்லாது,
பூமிக்கு அடியிலும் ஆகாயத்திலும் சாலைகளையும் குடிலையும் அமைக்க போகாமல் இருக்கப்போவதில்லை.
மனிதன் வாகனமாய் மாறி ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்திற்கு
பறக்காமல் இருக்கப்போவதில்லை;
புல்; பூண்டுகள் முளைக்கக் கூட பூமியில் இடம் இருக்காது.
விவசாயம் விழுந்தபின் வேறு உணவுப் பொருட்கள் கிடைக்காத வேலையில்,
உணவுக்கா மாமிச வேட்டை துவங்காமல் இருக்கப்போவதில்லை:

இயற்கை சுவாசம் பொருத்தி வலம் வரப்போகும் காலம் தூரத்தில் இல்லை ;
செயற்கை இறைப்பையை மனிதன் சுமக்கும் காலம் வரலாம் ;
கனரக வாகனங்களுக்குள் இராக்கட் போன்ற நவின ஊர்திகளில் கூட்டாய் வாழும் காலம் வரப்போகின்றது ;
மனித உருவத்தில் மாற்றம் என்று நிகழப்போகின்றதோ ,
பனிப்போர்கள் நடக்கலாம் ,
பனிக்கட்டியாக புவி மீண்டும் உருவாகலாம்;
கடலில் வாழும் விலங்கினங்கள் தரையைத்தேடி வரலாம் ;
செயற்கை அழிவு, வேற்று உலகின் தாக்குதல்
புவியைத்தாண்டி புது மனித இனம் பிறக்காமல் இருக்கப்போவதில்லை ;
கூண்டுப்பறவைபோன்று குடில்களை அமைக்காமல் டென்டு வாழ்க்கையும் தொடரும் நாள் தொலைவில் இல்லை;
கடல் நீர் மண்ணை விழுங்கலாம்:
கடல்நீருக்கு அடியுலும் கலன்கள் அமைத்து: மனிதன் வாழலாம்;
நெட்டைமனிதன்; குட்டை மனிதனாகலாம்;
குட்டை மனிதன் நெட்டையாகலாம்;
அழிவின் துகவக்கமும் நிற்கப்போவதில்லை;
அடையாலம் தேடி மனித இனம் ஓடலாம்;
ஆறுகள் மறைந்து போகலாம்;
கழிவே, மறு சுழட்சியால் மீண்டும் உணவாகலாம்;
மாத்திரையே உணவாகலாம்;
உனக்கு வயிற்று பசியே எடுக்காமல் இருக்கலாம்;
அலை அலையாய் புதிய நோய்கள் பிறக்கலாம்;
கனிமவளங்கள் காணாமல் போகலாம்;
கண்ணிருந்தும் குருடனாகலாம்;
தேடல் தேடல் தேடலில்;
கூண்டோடு கூண்டாக மனிதன் மறையலாம்;
இனப்பெருக்கத்தையே சிறுது காலம் நிறுத்த சதிகளும் நடக்கலாம்;
எரிந்துவந்த பூமி மீண்டும் எரியத்துவங்கலாம்;
புவியின் கால பருவ மாற்றம்;
மீண்டும் ஓரு பிரளய வெடிப்பு நிகழலாம்;
புவியும் உடைந்து புது புது கோல்கள் உருவாகலாம்; அல்லது
எரிந்து எரிந்து மீண்டும் ஒரு ;
புதிய வாழும் பூமி உருவாகலாம்;
வேற்று கிரக மனிதனின் தாக்குதல்,
புவி தூல் தூலாய் சிதறலாம்,
உன் வெறித்தனமான ஆட்டத்தாலும்,
விளையாட்டாலும்,
உன் இனமே உன்னால் அழியலாம்;
விடியலே விழுந்து போகலாம்;
விடுதலை இல்லா விடில் பிறக்கலாம்.
வேண்டாம் வேண்டாம் இந்த விபரீத விடியல்
என்று வேண்டிக்கொண்டே இன்றைய விடியலுக்கு நன்றி கூறி உங்களுக்கு காலைவணக்கம் கூறவரும்
அன்பன் . அ. முத்துவேழப்பன்

எழுதியவர் : அ. முத்துவேழப்பன் (4-Feb-22, 8:49 pm)
பார்வை : 280

மேலே