முல்லைச் சிரிப்பை முன்னுதட்டில் காட்டு

முல்லை விரிந்த தோட்டத்தில் வந்த முத்தமிழ்ச் செல்வியே
எல்லை யிலாக் கடல்நீலத்தை இருவிழிகளில் ஏந்தி நிற்பவளே
கல்லில் வடிக்க வேண்டிய காவியப் பேரெழில் தேவதையே
முல்லைச் சிரிப்பை முன்னுதட்டில் காட்டு சொல்லில்கவி பொழிகிறேன்