தாய்மை

ஏ ஆணினமே இதுவென்ன
நீ கண்ணால் பார்த்து ரசிக்க
கவர்ச்சி அங்கமல்லடா
திருட்டுத்தனமாய் படம்
எடுக்க ஆபாசம் அல்லடா

உன்னையும் என்னையும்
சுமந்த வேதனையின்
அடையாளமிதடா

கண்டவர் கண்ணிலிருந்து
கற்பையும்
கண்ணாளனுக்காக கட்டழகையும்
கட்டிக் கட்டிக் காத்தவளின் காயமிதடா

இருளறையில்
உன் கட்டடங்கா ஆசைக்கும்
பெண்ணிணத்தின் மகிமைக்கும்
தன்னை அர்ப்பணித்த
அடையாளமிதடா

ஒரு துப்பாக்கி ரவை
கூட தாங்க முடியா உன் தேகம்
அதை தாண்டிய
வலியை தாங்கிய இலட்சனமடா

ஐந்து பௌர்ணமிகள்
வாயிலும் வயிற்றிலும்
குமுட்டலும் வாந்தியுமாய் கடந்து
மீதி பௌர்ணமிகள் ஐந்தை
சுமை பாராது தாங்கி
வெற்றிக் கொடி ஏற்றிய கீறல்களடா அது

இவனின்_கிறுக்கல்கள்
சப்ரான்_நஜீர்

எழுதியவர் : சப்ரான் நஜீர் (9-Feb-22, 11:59 am)
Tanglish : thaimai
பார்வை : 826

மேலே