காலத்தை வென்ற மொழி
"கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
வாளோடு முன் தோன்றிய
மூத்தகுடி... தமிழ்குடி...."
"புறப்பொருள் வெண்பா மாலை" கூறும்
நம் பரம்பரை சரித்திரம்.
குறிஞ்சி...முல்லை...பாலை..
மருதம் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்தகுடி...நம்தமிழ் குடி
அப்படியென்றால்
அதனினும் மூத்ததல்லவோ நம் தமிழ் மொழி!
தமிழனாய்ப் பிறந்த நம் பிறப்பிற்கு
தலைநிமிர இதைவிடச்
சிறந்த வரலாறு...
சிறந்த சான்று..வேறுண்டோ!
காலங்கள் எத்தனை மாறினாலும்...
மாற்றங்கள் எத்தனை கூடினாலும்...
இந்த துரித யுகத்தில்..
இந்த கணனி உலகிலும்
வேகம் சற்றும் குறையாமலும்
இளமை சற்றும் மாறாமலும்
மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து - புதிதாய்
புதுமையாய் மாறி..மாற்றிக்கொண்டு
இன்னும் தேனாய்..இனிக்கும்
என்றும் தெவிட்டாத மொழி
நம் மொழி...தமிழ் மொழி.
எத்தனையோ ஏற்ற இறக்கங்கள்
இயற்கையிலும் சரி - வாழ்க்கை
நடைமுறையிலும் சரி - உலகச்
சரித்திரத்திலும் சரி
அத்தனையையும்
கடந்து...கறைபடாது ஓங்கி
நிலைத்துநிற்கும்
காலத்தை வென்று...வாகைச்சூடிய
ஒரே மொழி நம் தமிழ் மொழி.
என் தாய்மொழியே
தலை வணங்குகிறேன்.