காதலர் திருநாள்
காதலர் திருநாள் இன்று
காதலர் இணைவார் வென்று !
@@@@@@@@@
ஒற்றை ரோசாவை
இருகையிலும்
முற்றியப் பேரன்பை
முழுநெஞ்சிலும்
சுமந்தேன் கொடுத்தேன் மகிழ்ந்தேன்
காதலர் களிகொள்ளும் தினம் வாழவே !
நின் காதல் பெருவெள்ளம் நான் மூழ்கினேன் !
நினையாத நேரத்தில்
நான் தேக்கினேன்!
எனைச் சாடும் வசவெல்லாம் கவியாகுமே
உனைக் கூவும் கூப்பாடும் இசையாகுமே !
உள்ளத்தில் நீங்காத பெருநாளிலே
உலகத்தில் தீங்கில்லாத் திருநாளிலே !
ஈருடல் ஒன்றாகி மூன்றாகுமே
பாரினில் நம்வாழ்வு சான்றாகுமே !
-யாதுமறியான்.