தமிழ் பேசும் பேரழகி
அவள் நடந்து சென்றால்
அவள் கால்பட்ட முள்
முல்லை ஆனது
கல் கள்லானது
அவள் கை பட்ட
புளி புலியானது
வலி பலியானது
அவள் கண் பட்ட
ஒருவன் இக் கிளியோடு
அவள் மனச் சிறையில்
மற்றவர்கள் வலியோடு
களியோடு சிறையில்
அவள் பேரழகி அல்ல
அவள் பேரே அழகி
அவள் பாத்திரத்தை
வீட்டில் வைத்திருந்தாள்
பா திரத்தை நெஞ்சுக் கூட்டில் வைத்திருந்தாள்
இவள் மட்டும்
இந்தியாவில் இல்லையென்றால்
இந்தியா மேற்கு இந்திய தீவுகள்
போல வெப்பம் கூடி
நாம் கருப்பாக ஆகியிருப்போம்
இவளை வெயிலுக்கு வேண்டுமானால் காட்டாமல் வளர்த்திருப்பார்கள்
ஆனால் தினந்தோறும் மயிலுக்கு காட்டித்தான் வளர்த்திருப்பார்கள்
வறுமையின் நிறம்
சிவப்பு என்பது இவள்
இடையழகை கண்டதும் தான் விளங்கியது
இவள் பின்னால்
மீனவன் சுற்றுகிறான்
இவளின் கண்கள் மீன் என்று
கரடிகள் சுற்றுகின்றது இவள் மொத்த எடையும் தேன் என்று
வேடன் சுற்றுகிறான் இவள் துள்ளி ஓடும் மான் என்று
இவள் எப்போது அறிய போகிறாள் இவளை விரும்புபவன் நான் என்று
நானும் ஒரு ஆண் என்று