காதல் புதிய
காதல் இல்லாத உலகம் இல்லை
காதலிக்காத மனிதன் யாரும்
இல்லை
காதல் எனும் வார்த்தையை
கண்டவன் கவிஞன் ஆகிறான்
காதல் வந்த பின் அவனே
புதுமனிதன் ஆகிறான்
கண்களிலே காதல் செய்கிறான்
காற்றினிலே புது கவிதை
சொல்கிறான்
கனவிலும் அவளை கண்டு
ரசிக்கிறான்
அவளிடம் பேச வார்த்தை வாராமல்
தவிக்கிறான்
தனியாக பேசி சிரிக்கிறான்
தவிக்கும் இதயத்திற்கு அவளே
தீர்வு என்று நினைக்கிறான்