வஞ்சிப்பா

உடலோடொரு பிணிதோன்றிடத்
திடகாத்திர வலுநீங்கிடத்
துவண்டேவிழும் நிலையேவரத்
தவறாதுன தருகாமையில் -
உறவாய்க்
கட்டிய மனைவி கண்ணெதிர் கடவுளாய்த்
தொட்டுத் தூக்கித் துன்புறும்
மட்டும் அறியாய் மாதவள் மகிமையே !

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Feb-22, 2:39 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 69

மேலே