ஹைக்கூக்கள்
சிலந்தி விரித்த வலை
சிக்கிக் கொண்டன
சிறகடித்த -சில
தேவதைகளும்!
☆☆☆
சூரியனுக்குச் சுரம்
சுரமாணிக்கு வெளியே
பாசரசம்!
☆☆☆
வண்ணம் தீட்டுகிறார்கள்
வெள்ளை நரைக்கு வெண்மை ஏற்றுகிறார்கள்
காவிப் பல்லுக்கு.!
☆☆☆
எலிகளின் எல்லைப் பிரச்சினை
நடுவராக அமர்ந்தது
நல்லபாம்பு !
☆☆☆
கழிவறைகளில்
கால்வைக்கும் மனிதர்கள் -கடுப்பில்
கரப்பான் பூச்சிகள்!
☆☆☆
கடந்து போனவள்
விட்டுச்சென்ற பூவாசம் நீடிக்கிறது!
வீடுவரை!
☆☆☆
நெருப்பென்றால் சுட்டுவிடாது
தொட்டு விட்டால்
விட்டுவிடாது !
■■■■■
-யாதுமறியான்.