இயற்கையொடு ஊடல்
ஊடல்..
உணவு தரவில்லை என
ஒருபோதும்
சினந்ததில்லை
பசியென
ஒரு பாழும் துயர் கொடுத்தது ஏன் என்றேக் கொதித்ததுண்டு!
உடை கொடுக்கவில்லை எனச் சினந்ததில்லை
குளிரொடு வெயில் கொடுத்தக் குற்றத்திற்கே முனிந்நதுண்டு!
குடை கொடுக்கவில்லையென சினந்ததில்லை
கொட்டுமழை ஏன் கொடுத்தாய்க்
கேட்டதுண்டு!
வீடு தர வில்லையென விடைத்ததில்லை
காரிருளை உறக்கத்தினைப்
படைத்ததினால் கோபமுண்டு !
தக்கத் துணை இல்லையெனும் தர்க்கமில்லை
தாரணியில் பேரழகைப்
படைத்ததினால் தாக்கமுண்டு!
உமக்கென்ன இயற்கையெனும்
போர்வையினுள்
புகுந்து கொள்வாய் ;
இயலாதோர் யாது செய்வார்
நினைத்ததுண்டோ!
-யாதுமறியான்.