காதல் நீர் 💧💧
மலையில் தோன்றுகிறாய் பாய்ந்து
ஒடுகிறாய் கல்,மண் என கடந்து
வருகிறாய் காடு,மேடு என சுற்றி
திரிகிறாய்
குளம், குட்டையில் வந்து தாங்கி
விடுகிறாய்
ஆறு,கடல் என நாடு விட்டு நாடு
செல்கிறாய்
பல உயிர்களை வாழ வைக்கிறாய்
சுனாமியாய் சில சமயம் மாறி
விடுகிறாய்
பயிர்களை செழித்து வளர
செய்கிறாய்
கங்கை,காவிரி, வைகை என
புண்ணிய நதியாகிறாய்
மீனவர்களின் அன்னையாகிறாய்
முத்து,சிப்பி, பவளம் என விலை
உயர்ந்த பொருள்களின் பிறப்பிடம்
ஆகிறாய்
உன் வடிவத்தை நீ இருக்கும்
இடத்திற்கு ஏற்றபடி காட்டுகிறாய்
உன் கருணையால் உன்னையே
தருகிறாய்
உலகிற்கு அமிர்தமாய் நீ
இருக்கிறாய்
உன் அருமை எங்களுக்கு
புரியவைக்கிறாய்
நீர் இன்றி இந்த உலகம் அமையாது
என தெரியவைகிறாய்