பூக்களும் அவளும் ஒன்றோ
தாமரை இதழ் போன்ற கன்னம்
ரோஜா இதழ் போன்ற செவ்விதழ்
மல்லிகை சரம் போன்ற கூந்தல்
சூரியகாந்தி போன்ற முக வடிவம்
குண்டு மல்லிகை போன்ற கண்கள்
கனகாமரம் போன்ற மூக்குத்தி மூக்கு
செவ்வந்தி போன்ற நெற்றி
பூவரசம் போன்ற காதுகள்
ஊசி முல்லை போன்ற புருவங்கள்
நந்தியாவட்டம் போன்ற இமைகள்
ஒவ்வொரு பூக்களையும் இரசிக்கிறேன்
அதனுடன் சேர்ந்து அவளுடைய அழகையும் இரசிக்கிறேன்.....
உங்கள்
😍தமிழ் அழகினி✍️