மகத்துவமானவன்
மனிதன் திறமை மிகுந்தவன்
அறிவு தெளிந்த பின்னே
இயற்கையை அழித்து கபளீகரித்து
பொட்டலாக்கி வீட்டில் தோட்டம் போட்டு
உயிரினத்தை காக்கச் சொல்லி
தெருவெங்கும் பதாகை நாட்டி
தம்மை உலகின் பாதுகாவலனாய்
மிடுக்காய் காட்டிக் கொண்டவன்
தேவைக்காக நஞ்சை அமிழ்தமென்றும்
பொன்னை செம்பு என்றும்
மொழியை துர்நாற்ற மலமென்றும்
கூச்சமின்றி கூறியே குதுகலிப்பவன்.
---- நன்னாடன்