கடைக்கண் பார்வை
ஒரு சிறுமலர்
இளமொட்டாய் கொடியில்
மொட்டவிழ்த்து...
ஏ....தென்றலே
என்னைத் தொட்டுவிடாதே
நான் சிலிர்த்துப் போவேன்
என்று மெல்ல சொல்ல
இருந்தும் ரகசியமாய்
தென்றல்
பட்டும்படாமல்
தொடும்போது
ஓ......
அந்த சிலிர்ப்பு
உன் கடைக்கண்
பார்வையில்....