மதுபோல் இதழே

உனக்கு கடிதம் எழுத
என் பேனா கூட
காதல் கொள்கிறதே...!
அது தாளில்
நகரும்போதெல்லாம்
என் எழுத்தும் கூட
காவியம் ஆகிறதே....!
எனதன்பே...!
நான் மூச்சடக்கி முத்துக் குளித்தேன்
உன் பற்களை பார்க்க மலர்ந்துவிட்டேன்
முத்துநகையே....!
நான் விடியவிடியத் தமிழைப் படித்தேன்
உன் சொற்களை கேட்க மயங்கிவிட்டேன்
தேனின் சுவையே......!
நான் கண்கள் பூக்க ஜதிகளிட்டேன்
உன் நடையை காணாது போய்விட்டேன்
நாட்டிய நடையே.....!
நான் அலைகள் கண்டு ஆர்பரித்தேன்
உன் கூந்தல் தடவ மறந்துவிட்டேன்
அலைபோல் குழலே......!
நான் மீன்களைக் கண்டு வியப்புற்றேன்
உன் விழிகள் காணாதிருந்துவிட்டேன்
கயல்போல் விழியே.....!
நான் கொடியை கண்டு களியுற்றேன்
உன் இடையை தழுவாதிருந்து விட்டேன்
கொடிபோல் இடையே....!
நான் மதுவை உண்டு மயங்கலுற்றேன்
உன் இதழை சுவைக்காதிருந்து விட்டேன்
மதுபோல் இதழே....1

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (16-Feb-22, 8:10 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 97

மேலே