மழையும் மழை தூறலும்
கொட்டும் மழை எனக்கு பிடிக்காது
அதில் தப்பித்த தவறி நனைந்தாலும்
ஆனால் எனக்கு வசந்தத்தின் முதல்
மழை தூறல் என்றால் கொள்ளை ஆசை
அதன் இதமான மெல்லிய முத்து முத்தாய்க்
தெறிக்கும் மழைத்துளியில் நனைந்திட ;
மழை தூறல் துள்ளும் மான்போன்றது
மழையோ துரத்தும் புலிபோல்....