மெழுகாய் நாளும் உருகிட வேண்டும்
அந்த புல்வெளியில்
எந்தன் ராஜாங்கம்...!
அர்த்த ஜாமத்தில்
ஒருவித ஏகாந்தம்...!
அந்த விழியில் காணும்
அர்த்தங்கள் ஆயிரமும்
சந்தக் கவிபாட
சந்தனங்கள் பூச
எந்தன் மனதில்
சொர்க்கம் வந்து கிள்ள
கண்கள் இரண்டிலும்
பட்டாம்பூச்சிகள் மின்ன
காதலில் கரைந்திடும் - அவள்விழி
ஓவியம் வரைந்திடும் - கனிமொழி
காவியம் படைத்திடும் - இடைவெளி
இதயம் உடைத்திடும்
தனிமொழி இதற்கென தரணியில்
மறுமொழி இல்லையே
கடந்திடும் காலம்தான் ஒன்று
சேர்த்திட வேண்டும் - இல்லை
கரைந்திடும் மெழுகாய் நாளும்
உருகிட வேண்டும்.