யாரடி அவ கையை வீசி

யாரடி அவ கைய அங்கயும் இங்கயும் வீசிட்டு நடக்கிறவ? பாரு அவ நடக்கிறதை. நம்மூரில இந்த.ற மாதிரி நடக்கிறவ எவளுமே இல்லையே! வெளியூருக்காரி போலத் தெரியுது. அவ யாருனு கேளுடி பூங்கோதை@@@@@@
ஏம்மா உன்னப் பாத்தா பட்டணத்துப் பொண்ணு மாதிரி தெரியுது. இங்க யாரு வீட்டுக்கு வந்திருக்கிற?
#@@@@
நான் சென்னையில் இருந்து என் தோழி மலர் வீட்டுக்கு வந்திருக்கேன் அக்கா.
@@@@@@
ஓ... மலர்கூடப் படிக்கிறவளா? நல்லது. ஏங் கையை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் வீசிவீசி நடக்கிற?
@@@@@@
கையை வீசி நடக்கிறது என்னோட ஸ்டைல். நான் நடப்பதைப் பார்த்து எனக்கு 'நடையழகி'ன்னு சென்னை மகளிர் மன்றம் பட்டமே குடுத்திருக்கிறாங்க?
@@@@@@
ஏன்டி கைவீசி பட்டணத்துப் பாப்பா உம் பேரு என்னடி?
பாட்டி என் பேரு 'கை'.
|@@@@@
என்னடி சொல்லற? உம் பேரு கையா? நல்லவேளை காலுன்னு உனக்கு பேரு வைக்கல. என்னடி இது தமிழ் 'கை'யா, இந்திக் 'கை'யா? அல்லது வேற எதாவது வெளிநாட்டுப் 'கை'யா?
@@@@@@@
வெளிநாட்டு 'கை'தான் பாட்டி. அந்தக் கைக்கு 'தூய்மையான'னு அர்த்தம்.
@@@@@@
நல்ல அர்த்தம் தான். அதுக்கு பதிலா 'தூய்மை'ன்னு தமிழ்ப் பேரையே வச்சிருக்கலாம். சரி, சரி. போ. போ.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Kai = pure. Native American, Danish, Scottish, Welsh, Hawaiian, Indian origin.

எழுதியவர் : மலர் (19-Feb-22, 11:20 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 121

மேலே