மழலை

மனதை மயக்கும்
மழலைகளின் மல்யுத்தம்....
தேவதையை தரையிரக்கும்
தளர்வில்லா தன்னம்பிக்கை....
அளவில்லா ஆர்வத்துடன்
ஆகாய மங்கையையே
அபகரிக்கும் அச்சமின்மை...

கற்பனையில் கட்டவிழ்த்து
கவிபாடுபவர்கள் கவிஞர்கள்...
காணும் காட்ச்சியை யெல்லாம்
கண் கவர் காட்ச்சியாக
சித்தரிப்பதில் வல்லவர்கள்...

கவிதையைப் படிக்குங்கால்
வாழும் சூழல் மறந்து
கற்பனை யுலகில் உலாவரும்
மகிழ்வு மனதை வருடிச்
செல்வது உறுதி...

அக்கற்பனை திறமையே
பொய்க்கும் வண்ணம்
இயற்கையையே தன்
பிஞ்சு கரங்களுக்குள்
அடக்க முயலும் சிறார்களின்
தன்னம்பிக்கைக்கு ஈடேதும்
உண்டோ இவ்வுலகினிலேjQuery17103477449608592815_1645361290307

ஆயினும் சிறார்கள்
அறியாதது, இயற்க்கை
மகளவள் மனமுவந்து
தரையிரங்கினால் ஒழிய
அவளை தரையிறக்குவது
இயலாது அன்றோ??

மழலைகளின் மல்யுத்தம் கண்டு
பூவுலக வாசிகளின் மனம்
மயங்குவதில் அதிசயம் ஒன்றுமில்லை..

ஆகாய தேவதை நிலவுமங்கை
யவள் மனம் மயங்குவாளா??

மழலைகளின் இடைவிடா முயற்ச்சிக்கு
நிலாமகள் செவி சாய்ப்பாளா??

நித்தம் நித்த மிந்த
மழலைகள் மனம் மகிழ
வெண் மகள் மனமுவந்து
தரை யிறங்குவாளா??

தரையிரங்க மனமிரங்கினால்
வெண்ணிலவும் தன்
தணிமை மறந்து
மனம் மகிழுவாளே....

எழுதியவர் : கவி பாரதீ (20-Feb-22, 6:17 pm)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : mazhalai
பார்வை : 149

மேலே