பெரியாரின் வெங்காயமோ

கண்ணில் காணும்வரைதான் உலகம்
மண்ணில் புதைந்தபின்...?
புண்கள் இருக்கும்வரைதான் மருத்துவம்
புண்கள் மறைந்தபின்...?
உயிர் இருக்கும் வரைதான் உறவு
உயிர் பிரிந்தபின்...?
மயிர் இருக்கும் வரைதான் அழகு
மொட்டையாய் மழித்தப்பின்...?
கருமேகம் இருக்கும்வரைதான் மழை
காற்றடித்து கலைந்தபின்...?
கருமுட்டை இருக்கும்வரைதான் கர்பம்
உருமாறி கலைந்தபின்...?
பையில் இருக்கும்வரைதான் காசு
கையில் கரைந்தபின்...?
பொய்கள் இருக்கும்வரைதான் உண்மை
உண்மை தெரிந்தபின்...?
எல்லாம் இருக்கும்வரைதான் அஞ்ஞானம்
எதுவும் இல்லாதபோது மெய்ஞானம்
என்ன உலகமடா இது ?
யாரின் நாடகமோ!
உரிக்க...உரிக்க...
ஒன்றுமேயில்லாத
பெரியாரின் வெங்காயமோ....!

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (21-Feb-22, 9:13 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 164

மேலே