ஆசை அலைகள்

ஆசையே எல்லாம் என்று நினைத்து
வாழ்ந்தால் அதை அடையாத போது
காமம் ஏனைய அலைகளால்
இழுக்கப்பட்டு சம்சார கடலில் அமிழ்ந்துபோகின்றான்
ஆசையை உணர்ந்து துறப்பவன் இந்த
பிறவிக்கடலை நீந்தி அக்கறை அடைகிறான்
அங்கு பேரின்பவீட்டில் வாழ்ந்திட அதுவே
தேவதேவனின் இருப்பிடம் என்றறிந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Feb-22, 3:58 pm)
Tanglish : aasai alaigal
பார்வை : 178

மேலே