தூரமாய் போன தோழமைக்கு

அலைபேசியில்
உன் எண்ணைத் தவிர
வேறு பதிவுகள் ஏதுமில்லை - என்னில்

தாமதமான தந்தி யென
வந்து சேர்ந்த
உன் குறுந்தகவல்கள்
என்னுள் ஏதோ செய்கிறது.

உனக்கும் எனக்குமான நட்பின் நெருக்கம் தீர்ந்து
ஆண்டுகள்
நான்கு கடந்துவிட்டன.

வறண்ட பாலை நிலத்தில் உதித்த துளிரினைப் போல்
உன் மனதின் ஏதோ ஒரு மூலையில்
என் நட்பின் தடம் இன்னும்உயிர்ப்புடன்
இருக்கின்றது என்று நினைக்கும்போது சற்றே பெருமிதம்
எனக்கு..


அன்புடன் ,
ஆர்கே..

எழுதியவர் : kaviraj (23-Feb-22, 6:19 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 148

மேலே