உயிர் கொண்ட மல்லிகையே 555

***உயிர் கொண்ட மல்லிகையே 555 ***


ப்ரியமானவளே...


வளைந்த இரு கருப்பு
வானவில் புருவத்தின்...

நடுவில் கடுகு போல
ஓர் பொட்டு...

வெண்சங்கு பூவில்
மகரந்தம் தூள் போல...

உனக்கு இரு கண்கள்...

ரெட்டை குழல்
துப்பாக்கி போல நாசி...

உதிர்ந்த கோவை பழம்போல
ரேகைகள் கொண்ட உன் இதழ்கள்...

உன் காதோரம்
கவிபாடும் ஜிமிக்கி...

பாக்குமர கழுத்தில்
நூல்போல தங்க சங்கிலி...

நேர்வகிடு எடுத்து நெஞ்சுமேல்
வீற்றிருக்கும் ரெட்டைஜடை பின்னல்...

உன் கோப பார்வையில்
பரவசம் ஆனேன்...

பாதகத்தி உன் கண்பட்டு
உன்மீது மையல் கொண்டேன்...

நீயோ என்
நெஞ்சில் குடிகொண்டாய்...

உயிர்கொண்ட மல்லிகையே...

நான் சூட வேண்டும்
நாளை உன் கூந்தலில்.....


***முதல்பூ .பெ .மணி.....

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (23-Feb-22, 6:02 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 622

சிறந்த கவிதைகள்

மேலே