உண்டு

"உறவினர் வீட்டு திருமணத்திற்க்கு தாமோதரன் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். முகூர்த்தம் முடிந்தவுடன் மனைவி தன் சொந்தகாரர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

சற்று தள்ளி தாமோதரன் அமர்ந்திருந்தார்.
அருகில் அவருடைய இரு பெண் குழந்தைகளும் விளையாடி
கொண்டிருந்தனர்.

அப்போது மற்றுமொரு சொந்தக்காரர் வந்து, தாமோதரன் அருகில் அமர்ந்து
பேச தொடங்கினார்.

விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை கண்டு, 'உன் குழந்தைகள் தானே' என்று கேட்க, தாமோதரன் தலையாட்டினார்.

அவர்களைப் பற்றி விசாரித்த உறவினர், "உன் முதல்
குழந்தையைப் போல இரண்டாவது குழந்தை அவ்வளவு புத்திசாலி இல்லை அல்லவா? "
என ஆங்கிலத்தில் கேட்க,
தாமோதரன் மவுனமானார்.

பக்கத்தில் விளையாடி
கொண்டிருந்த அந்த குழந்தை சட்டென்று திரும்பி
பார்த்து ஓடி வந்து, "அங்கிள்
நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு
நான் புத்திசாலிதான்"!
என்று கூறிவிட்டு அப்பாவை
பார்த்து சிரித்தது.

தந்தையின் முகத்தில் 'பெருமை'
கேட்டவர் முகத்தில் ஈயாடவில்லை!

குழந்தைகளுக்குள் ஒப்பீடு கூடாது, 'குழந்தையும், தெய்வமும் ஒன்று'
என்பது பெரியோர் வாக்கு.

ஒவ்வொரு தெய்வத்துக்குள்ளும்
அருள் இருக்கும்'
ஒவ்வொரு குழந்தையின்
பிறப்புக்குள்ளும் பொருள் இருக்கும்".

எழுதியவர் : (25-Feb-22, 10:43 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : undu
பார்வை : 173

மேலே