கியாரா தயாரா

மொதல்ல பொறந்த (இ)ரட்டைப் பெண் குழந்தைக்கு 'கியாரா'ன்னு வடக்கத்தி சோதிடர் சொன்னபடி பேருவச்சாச்சு. அடுத்த இருபது நிமிசம் கழிச்சு (இ)ரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அதுக்கு என்ன பேரு வைக்கலாம்னு சோதிடருகிட்டக் கேட்டபோது '"கியாரா'வுக்குப் பொருத்தமா நீயே ஒரு வச்சுக்கய்யா"னு சோதிடர் சொல்லிட்டாரு. ஒரே குழப்பமா இருக்குதுங்க பாட்டி.
@@@@@@@
இதில என்ன குழப்பம்டா பேரா கெத்துராசு.
மூத்தது 'கியாரா' -ன்னா அந்தப் பேருக்குப் பொருத்தமா 'தயாரா'-ன்னு வச்சிருடா கெத்து.
#@@@@@@@
அருமை! அருமை! அந்தக் காலத்து சத்துணவான கேழ்வரகு களி, கம்பு, சாமை, சோளம், வரகு, திணை சோறோடு சொந்தத் தோட்டத்தில் விளைவித்த பயறு கீரை வகைகளைத் தின்று வளர்ந்த உங்க மூளை சுறுசுறுப்பா மின்னல் வேகத்தில வேலை செய்யுதுங்க பாட்டி. 'கியாரா' -'தயாரா'. அடடா. பொருத்தமான பேருங்க பாட்டி.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Kiara = Little black one. English Indian origin. Feminine name.

எழுதியவர் : மலர் (25-Feb-22, 9:56 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 91

மேலே