காதல் விண்ணப்பம்
கொடியிடை கொண்டவளே
உன் இடையில் கொடியாக
படர்வதற்கு
அனுமதி வேண்டி
"காதல் விண்ணப்பம்"
உனக்கு வரைகிறேன்...!!
விண்ணப்பம் என்றவுடன்
என்னை அந்நியன் படத்தின்
அம்பியாக எண்ணாதே...!!
தும்பிபோல் பறந்து
நம்பிக்கையோடு
வாழ்க்கை வண்டியை ஓட்டும்
திறமை கொண்ட "கில்லி நான்"...!!
--கோவை சுபா