நட்பா காதலா

நட்பு ...
காதல் ...
மூன்றெழுத்து அற்புதங்கள்

இதில் எது இல்லாமலும் வாழ்க்கை முழுமை பெறாது.

நினைவுகளை அசை போடுவதில்
இருவருக்கும் சமஉரிமை
இருந்தும் காதலில்
வலியாய் மாறவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது ..

காதலர்கள் சூழ்நிலைக்காக காதலை
விட்டுக் கொடுக்கலாம்

நட்பு என்றுமே நண்பர்களை விட்டு கொடுப்பதில்லை அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில்


தனக்கானவர்களைத்
தனக்கென நினைப்பதில் இருவருமே சளைத்தவர் இல்லை


அன்பு இருவருக்கும் இங்கு பொதுவானது.

காதலில் நட்பு இருக்கலாம்
சில நேரங்களில்
நட்பில் கூட காதல் மலரலாம்

என்னைக் கேட்டால்
நட்பில் நனையுங்கள்
காதலில் கரையுங்கள்
வாழ்க்கை வசந்தமாகும்.

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (10-Mar-22, 6:16 pm)
சேர்த்தது : kaviraj
பார்வை : 153

மேலே