காத்திருக்கும் கடிதம்

உன் பாடலை கேட்டு சிலிர்த்து போகும்
என் உடம்பு;
அதன் ஆழத்தை உணர்ந்து புரிந்து கொள்ளும்
என் எலும்பு.
உன் குரலை கேட்டு சிரிப்பை விடுதலை செய்யும்
என் உதடு.
என்னை அறிய வைத்தாய்; நான் இல்லாமல்
என் வாழ்க்கை பழுது.

எத்தனையோ துன்பங்கள் என் மனதில் சூழ்ந்திருக்கும் போது,
என் கலங்கிய கண்களின் கண்ணீரை துடைத்துக் கொண்டே இருப்பாய்.
எத்தனையோ விஷயங்கள் என் மனதில் தோன்றும் போது,
என் சிந்தனைகளை சிந்தி சிறகடிக்க ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பாய்.

உனக்காக நான் எழுதிய காத்திருக்கும் கடிதம்.
இதில் குறிப்பிட்ட ஒவ்வொன்றும் பூர்வமான புனிதம்.

இப்படிக்கு,
அன்புடனும், அக்கறையுடனும்,
இப்பொழுதும் எப்பொழுதும் முப்பொழுதும்,
உன் ரகசிய ரசிகை.

எழுதியவர் : யு. மிருணாளினி (9-Mar-22, 4:55 pm)
சேர்த்தது : Mrinalini Y
பார்வை : 807

சிறந்த கவிதைகள்

மேலே