காரறிவி னாரை அடையார் அறிவுடை யார் – அறநெறிச்சாரம் 75

நேரிசை வெண்பா

பற்றொடு செற்றம் பயமின்றிப் பல்பொருளும்
முற்ற உணர்ந்தான் மொழிந்தன - கற்றும்
கடையாய செய்தொழுகும் காரறிவி னாரை
அடையார் அறிவுடை யார் 75

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

ஆசையும், பகையும் அச்சமும் இல்லாமல் பல பொருள்களினியல்பும் விடாது அறிந்த அருகக்கடவுள் கூறியவற்றை படித்தும், பழிக்கப்படுவனவற்றை செய்தொழுகின்ற இருள் போன்ற அறிவில்லாதவர்களை அறிவுடையவர்கள் அடையார்கள்.

குறிப்பு:

முற்ற உணர்ந்தான் - முழுவதும் உணர்ந்த இறைவன் எனலுமாம்.

கருமை + அறிவு = காரறிவு, கரிய அறிவு, அறிவின்மை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Mar-22, 8:48 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

மேலே