ஓர் ஒப்பீடு 1

இயேசு....தேவமைந்தன்
அவனோடு ஓர் ஒப்பீடு..!

ஒரு தெய்வம் மனிதனாய் ஆவது எங்கனம்
என்பதை நிரூபித்து காட்டியள்ளான்.
ஒரு மனிதன் தெய்வமாய் வாழ்வது எங்கனம்
என்பதை வாழ்ந்து காட்டியுள்ளான்.

அவன் பிறந்தநாளோ.....
காசு இல்லாமல்...பரிசுகள் இல்லாமல்...
படோடோபங்கள் இல்லாமல் - உலகில்
எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.
நம் பிறந்தநாளோ....
காசு கொடுத்தும்...பரிசுகளோடும்...
படோடோபங்களுடன் - நம்மால்
மட்டுமே கொண்டாடப்படுகிறது.

ஏழையாய் பிறந்தான் - பிறந்து
தாய்தந்தையர்க்கு
கடமையைச் செய்தான்.
கோழையாய் பிறந்தோம் - பிறந்து
தாய்தந்தையர்க்கு
கடமைக்குச் செய்கிறோம்.

ஆலயத்திற்குள் வியாபாரமே கூடாதென்று
அடித்துநொறுக்கினான் அன்று
ஆலயத்தையே வியாபார கூடமாக்கி
அடித்துநொறுக்குகின்றோம் இன்று.

அவன் வேதங்களை விளங்கும்படி
வாதிட்டான் - நாமோ
விளங்காதது வேதமென்று
வாதிடுக்கிறோம்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (12-Mar-22, 6:52 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 48

மேலே