ஓர் ஒப்பீடு 2
அவன் மானத்தை மறைப்பதற்கு
அங்கியிட்டான் - நாமோ
அங்கியில் மறைத்தபடி மானத்தை
பறக்கவிடுகிறோம்.
தன்னைத்தான் தாழ்த்துகிறவன்
உயர்த்தப்படுவான் என்றுரைத்தான் - நாமோ
நம்மைநாம் உயர்த்திக்கொள்ள
மற்றவரை தாழ்த்துகிறோம்.
ஒருகன்னத்தில் அறைந்தால்
மறுகன்னத்தை காண்பி என்றான் - நாமோ
மறுகன்னத்தை மட்டுமல்ல உயிரையே
அறைந்துவிடுகிறோம்.
இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும்
ஐயாயிரம் பேருக்கு பங்கிட்டு கொடுத்தான் - நாமோ
ஐயாயிரம் பேரை பங்கிட்டு நமக்கான
மீன்களையும் அப்பங்களையும் புசிக்கின்றோம்.