நான் உன் அடிமை
இரவில்.....
உன் நிர்வாணத்தை ரசிக்கிறேன்.
ஓ...இயக்கையே
இந்த அமைதி...
இந்த தனிமை...
மெலிதாய்..அழகாய்...தென்றலை
விசிறிவிடும் தென்னைகள்
தெரிந்தோ தெரியாமலோ
தொட்டுவிட்டதால் ஆர்ப்பரிக்கும் அலைகள்
புரிந்தோ புரியாமலோ
கண்சிமிட்டும் தாரகைகள்
காதலிக்கு
வெள்ளிப் படுதா போர்த்திவிடும்
நிலவின் கதிர்கள்
காதல் கொண்டு அணைத்துச் செல்லும்
பஞ்சு மேகங்கள்
ஓ...இயற்கையே
உன் இளமை...
உன் வளமை...
உன் நிர்மலமான நிர்வாணம்
என்னுள் நிறைந்து
நிம்மதியை பிரசவிக்கிறது.
அதனாலயே
நான் என்றும் உன் அடிமை...!
என்றென்றும்.