ஹைக்கூ
கட்டியவுடன் இடிய வேண்டும்
என்றெண்ணியே கொடுக்கப்படுகிறது
அரசின் ஒப்பந்தப்பணி. (க)
அரசின் எப்பணியையும் இடைத்தரகரை
அணுகி முடிக்க அரசமைத்ததே
ஆலோசனை மையங்கள். (உ)
தவறை தரமாய் செய்திட
தரணி மக்களை தயார்
செய்வதே தேர்தல் (ங)
தவறுக்கு நாணும் உணர்வுகளைச்
தவறெனக் கூறித் தூண்டியதே
கடவுள் மறுப்புக்கொள்கை. (ச)
நியாயத்தை கேட்கத் துணிவோரை
நயம்பட தண்டிக்கும் வகையே
சட்டத்தின் ஆட்சி முறை. (ரு)
விடுதலை அடைந்து எழுபதாண்டு
நிறைந்தும் குடிகள் உய்யாததற்கு
குறை அரசியலமைப்பில். (சா)
வாயால் வானத்தை வளைத்து
போரின்றி நிலம் ஆண்டிட
துணையாம் அரசியலமைப்பு (எ)
விளையும் நல்ல பொருட்களை
பணத்திற்காக வெளியில் விற்றிடும்
ஒப்பந்தமே உலகமயமாக்கல் (அ)
---- நன்னாடன்.