சேரனைக் காண உலவும் தெருக் கதவுகள் - முத்தொள்ளாயிரம் 1

நேரிசை வெண்பா
(ய் மீது உகரம் ஏறிய எதுகை)

தாயர் அடைப்ப மகளிர் திறந்திடத்
தேயத் திரிந்த குடுமியவே – ஆய்மலர்
வண்டுலாஅங் கண்ணி வயமாந்தேர்க் ...கோதையைக்
கண்டுலாஅம் வீதிக் கதவு. 1

- முத்தொள்ளாயிரம்

பொருளுரை:

மலர்களை ரீங்காரித்து வட்டமிடும் வண்டுகளை உடைய மாலையை அணிந்த, வலிமை மிக்க குதிரைகள் பூட்டப்பட்ட தேரை உடைய சேரனைக் காண உலவும் தெருக்கதவுகள், அன்னையர் அடைக்க, மகளிர் அடிக்கடி திறப்பதனால் தேய்ந்து சுழல்கின்ற சுழி ஆணிகளை உடையன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-22, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே